தேங்காய் உலர்களங்களில் பணிகள் பாதிப்பு
சாரல் மழையால் தேங்காய் உலர்களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
காங்கயம்
காங்கயம் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்களை அமைத்துள்ளனர். தேங்காய் எண்ணை உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்புவரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது.
தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப்பணிகள் முற்றிலுமாகப் பாதிப்படும். இந்த நிலையில் காங்கயம் பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது விட்டு விட்டு பெய்த சாரல் மழையால் தேங்காய் கள பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.ஏற்கனவே உடைக்கப்பட்டு உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல்... குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர்.