தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x

தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

தீயணைப்புத்துறையினர்

மடத்துக்குளத்தையடுத்த கணியூர் பகுதியில் குமார் என்பவருக்குச் சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மதியம் காய வைக்கப்பட்டிருந்த தென்னை நார்களில் திடீரென்று தீ பிடித்தது. உடனடியாக தொழிலாளர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மளமளவென்று பரவிய தீ அருகிலுள்ள கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தென்னை நார் பண்டல்களுக்கு பரவியது.உடனடியாக உடுமலை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

எரிந்து சேதம்

அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் பெரும்பகுதி தென்னை நார்கள் மற்றும் இருப்பு வைத்திருந்த கிடங்கு ஆகியவை முற்றிலுமாக எரிந்து நாசமானது.

அதேநேரத்தில் விலை உயர்ந்த எந்திரங்களில் தீ பரவாமல் தீயணைப்புத்துறையினர் பாதுகாத்தனர். இதனால் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டது. ஆனாலும் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த கணியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Next Story