ரூ.5¼ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
திருப்பூர்
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 11 விவசாயிகள் 142 மூட்டைகள் (7135 கிலோ), தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்கினர். தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.78 -க்கும், குறைந்த பட்சமாக ரூ.56-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 29 ஆயிரத்துக்கு பருப்புகள் விற்பனையானது. இதற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.
Next Story