பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு தேங்காய் வரத்து குறைந்தது

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடந்து வருகிறது. கடந்த வாரம் நடந்த ஏலத்துக்கு 1,905 கிலோ தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.26-க்கும், குறைந்தபட்சமாக ரூ.15-க்கும், சராசரியாக ரூ.23.35-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு தேங்காய் வரத்து குறைந்தது. அதாவது 1,476 கிலோ தேங்காயை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.23.79-க்கும், குறைந்தபட்சமாக ரூ.19.50-க்கும், சராசரியாக ரூ.23-க்கும் ஏலம் போனது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





