ரூ.31 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்


ரூ.31 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்
x

பரமத்திவேலூரில் ரூ.31 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோலும் ஏலம் நடப்பது வழக்கம். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 89 கிலோ தேங்காய்களை ‌ விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.27.11-க்கும், குறைந்தபட்சமாக ரூ.24.50-க்கும், சராசரியாக ரூ.26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.28 ஆயிரத்து 482-க்கு ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ‌ஏலத்திற்கு ஆயிரத்து 165 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.28.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.27-க்கும், சராசரியாக ரூ.‌27.10-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.31 ஆயிரத்து 591-க்கு ஏலம் நடைபெற்றது.


Next Story