வாடிப்பட்டி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்


வாடிப்பட்டி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
x

வாடிப்பட்டி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்பட்டது.

மதுரை

வாடிப்பட்டி,

மதுரை மாவட்ட விற்பனை குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 8 விவசாயிகளின் 28 ஆயிரத்து 631 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. 19 வியாபாரிகள் பங்கு பெற்றனர். ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ.9.55-க்கும், குறைந்த பட்சமாக ரூ.5.85-க்கும், சராசரியாக ரூ.6.10-க்கும் ஏலம் போனது. ெமாத்தம் ரூ.188016 தேங்காய் வர்த்தகம் நடந்தது.

மேலும் 13 விவசாயிகளின் 1208.6 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் 6 வியாபாரிகள் பங்கேற்றனர். அதிகபட்சமாக ரூ.73.50-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.10-க்கும், சராசரியாக ரூ60.10-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.75600-க்கு கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது.


Related Tags :
Next Story