ரூ.1¼ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்


ரூ.1¼ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
x

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¼ லட்சத்துக்கு தேங்காய் ஏலம் விடப்பட்டது.

மதுரை

வாடிப்பட்டி,

மதுரை மாவட்ட விற்பனைக்குழு சார்பில் வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 5 விவசாயிகளின் 16 ஆயிரத்து 940 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இதில் 16 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக ஒரு ேதங்காய் ரூ.9.85-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5-க்கும் சராசரியாக ரூ.7.37-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 988-க்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. மேலும் 24 விவசாயிகளின் 2 ஆயிரத்து 398 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் 6 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக ஒரு கிலோ கொப்பரை ரூ.75.10-க்கும், குறைந்த பட்சமாக ரூ.50.10-க்கும், சராசரியாக ரூ.68.79-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 992-க்கு கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது. இந்த தகவலை வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மேற்பார்வையாளர் அபிநயா தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story