பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வருகிற 24-ந்தேதி முதல் தேங்காய் ஏலம்


பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வருகிற 24-ந்தேதி முதல் தேங்காய் ஏலம்
x
தினத்தந்தி 16 July 2023 5:00 AM IST (Updated: 16 July 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வருகிற 24-ந்தேதி முதல் தேங்காய் ஏலம் நடைபெற உள்ளதாக கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வருகிற 24-ந்தேதி முதல் தேங்காய் ஏலம் நடைபெற உள்ளதாக கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

தேங்காய் விலை வீழ்ச்சி

பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய் கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து அனுப்பப்படுகின்றன.

தற்போது மார்க்கெட்டில் தேங்காய் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை. எனவே பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நேரடி கொள்முதல்

அதன்படி வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் ஏலம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. மறைமுக ஏலம் முறையில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து கொடுக்கப்படும். இந்த கொள்முதல் வருகிற 24-ந்தேதி முதல் நடைபெறும்.

பொள்ளாச்சி சுற்று வட்டார விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் பொள்ளாச்சி விற்பனை கூட கண்காணிப்பாளர் மற்றும் மேற்பார்வையாளரை 9894687827, 9944833678 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவல் பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வாணி வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story