தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.160 விலை நிர்ணயம் செய்யக்கோரி பட்டுக்கோட்டையில், தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நடுரோட்டில் தேங்காய்களை குவித்து வைத்து கோஷம் எழுப்பினர்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை,

கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.160 விலை நிர்ணயம் செய்யக்கோரி பட்டுக்கோட்டையில், தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நடுரோட்டில் தேங்காய்களை குவித்து வைத்து கோஷம் எழுப்பினர்.

தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.160-க்கும் உரித்த தேங்காய் கிலோவுக்கு ரூ.60-க்கும் கொள்முதல் செய்ய மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம், தென்னை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம், தஞ்சை மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பட்டுக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராமசாமி தலைமை தாங்கினார்.தென்னை விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில செயலாளர் மாசிலாமணி, பக்கிரி சாமி (இ.கம்யூனிஸ்டு) வீர மோகன், அக்ரி சுந்தரராஜ், அடைக்கலம் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்

தேங்காய் எண்ணெய்

ஆர்ப்பாட்டத்தில் கொப்பரை கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களிலேயே பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். கூட்டுறவு அங்காடிகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும். பட்டுக்கோட்டையை மையமாகக் கொண்டு தென்னை சார்ந்த பொருட்களை மூலதனமாகக் கொண்ட தொழிற்சாலை தொடங்க வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.160-க்கும் உரித்த தேங்காய் கிலோவுக்கு ரூ.60-க்கும் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் அறந்தாங்கி சாலை காந்தி சிலையிலிருந்து தென்னை விவசாயிகள் தேங்காயுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்த தேங்காய்களை நடுரோட்டில் குவியலாக வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.


Next Story