ரூ.5¼ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.5¼ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரம்தோறும் ஏலம் நடைபெறுவது வழக்கம். கடந்த வாரம் 4 ஆயிரத்து 792 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.91.70-க்கும், குறைந்தபட்சமாக ரூ.53.09-க்கும், சராசரியாக ரூ.77.09-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 351-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 15 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.85.59-க்கும், குறைந்தபட்சமாக ரூ.52.66-க்கும், சராசரியாக ரூ.81.25-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 27 ஆயிரத்து 854-க்கு விற்பனையானது.
Related Tags :
Next Story