விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தேங்காய் கடை அமைப்பதை கைவிட வேண்டும்

விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தேங்காய் கடை அமைப்பதை கைவிட வேண்டும்
x

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தேங்காய் கடை அமைப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.

திருப்பூர்

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தேங்காய் கடை அமைப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.

தேங்காய் கடை

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்றுகாலை ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நீண்ட காலமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். இங்கு கிழக்கு-வடக்கில் விவசாயிகளுக்கும், மேற்கு பகுதியில் கமிசன் மண்டிகளும், கிழக்கு -தெற்கு பகுதியில் சிறு வியாபாரிகளுக்கும் கடை அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தேங்காய் கடை அமைக்க செட் போடப்படுகிறது.

விவசாயிகளுக்கு இடையூறு

இதனால் மழைக்காலங்களில் விவசாயிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படும். எனவே மார்க்கெட்டில் தேங்காய் கடை மற்றும் பல்வேறு கடை அமைக்க ஏதுவாக நடக்கும் வேலையை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும். அரசு அறிவித்தபடி வடக்கு ஓரமாக சாலை அமைக்க வேண்டும். மார்க்கெட் சுங்கம் ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சி இடத்தில் விவசாயிகளுக்கு இடையூறான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து மார்க்கெட்டில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் வரையறுக்கப்பட்ட பணிகள் மட்டும் நடைபெற அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story