பரமத்திவேலூர் சந்தையில் தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


பரமத்திவேலூர் சந்தையில்  தேங்காய் விலை உயர்வு  விவசாயிகள் மகிழ்ச்சி
x

பரமத்திவேலூர் சந்தையில் தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடந்த ஏலத்திற்கு 6 ஆயிரத்து 925 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.23.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.16.50-க்கும், சராசரியாக ரூ.22.00-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 201-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று நடந்த ‌ஏலத்திற்கு 4 ஆயிரத்து 767 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.25.15-க்கும், குறைந்தபட்சமாக ரூ.19.29-க்கும், சராசரியாக ரூ.‌23.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 826-க்கு வர்த்தகம் நடந்தது. தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story