பரமத்திவேலூரில்முதல் முறையாக இ-நாம் மூலம் தேங்காய் ஏலம்விவசாயிகள், வியாபாரிகள் வரவேற்பு


பரமத்திவேலூரில்முதல் முறையாக இ-நாம் மூலம் தேங்காய் ஏலம்விவசாயிகள், வியாபாரிகள் வரவேற்பு
x
தினத்தந்தி 15 Feb 2023 7:00 PM GMT (Updated: 15 Feb 2023 7:01 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரத்து 993 கிலோ தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.26.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.16.19-க்கும், சராசரியாக ரூ.24.10-க்கும் ஏலம் போனது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ.நாம்) மூலம் தேங்காய் ஏலம் நடந்தது. ஏலத்துக்கு 951 கிலோ தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.26.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.21.00-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.22 ஆயிரத்து 470-க்கு ஏலம் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று இ-நாம் முறையில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதன் மூலம் விளைபொருளுக்கான கிரையத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இ-நாம் மூலம் நடைபெற்ற தேங்காய் ஏலம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை தோறும் இ-நாம் முறையில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற உள்ளது.. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மஞ்சுளா தெரிவித்துள்ளார்.


Next Story