தர்மபுரி ஏல அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு


தர்மபுரி ஏல அங்காடிக்குபட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 28 April 2023 12:30 AM IST (Updated: 28 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,630 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2,494 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.560-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று ரூ.6 விலை அதிகரித்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.566-க்கும், குறைந்தபட்சமாக ரூ.252-க்கும், சராசரியாக ரூ.440.49-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.10 லட்சத்து 98 ஆயிரத்து858-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

1 More update

Next Story