தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக் கூடுகள் விலை குறைந்தது


தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக் கூடுகள் விலை குறைந்தது
x
தினத்தந்தி 10 May 2023 12:30 AM IST (Updated: 10 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன் தினம் 5,545 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,735 கிலோவாக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.523- க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.32 விலை குறைந்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.491-க்கும், குறைந்தபட்சமாக ரூ.300-க்கும், சராசரியாக ரூ.389.18-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்து 512மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story