கோவை அ.தி.மு.க. பிரமுகருக்கு தொடர்புடைய நிறுவனங்களில் 3-வது நாளாக சோதனை


கோவை அ.தி.மு.க. பிரமுகருக்கு தொடர்புடைய நிறுவனங்களில் 3-வது நாளாக சோதனை
x

கோவை அ.தி.மு.க. பிரமுகருக்கு தொடர்புடைய நிறுவனங்களில் 3-வது நாளாக சோதனை நடந்தது.

கோயம்புத்தூர்


கோவை அ.தி.மு.க. பிரமுகருக்கு தொடர்புடைய நிறுவனங்களில் 3-வது நாளாக சோதனை நடந்தது.

வருமான வரித்துறை சோதனை

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். கடந்த 6-ந் தேதி சந்திரசேகர் வீடு, அவரது பெற்றோர், சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.

அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்திய அதிகாரிகள், வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினரிடம் வருமானம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் செயல்படும் கே.சி.பி. நிறுவனத்திலும் சோதனை நடந்தது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களாக சந்திரசேகரும், அவரது நண்பர் சந்திரபிரகாஷ் என்பவரும் உள்ளனர்.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று முன்தினமும் இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் புலியகுளம் நிறுவனம், மருதமலையில் உள்ள சந்திரசேகரின் சகோதரர் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.

திடீர் உடல் நலக்குறைவு

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக சந்திரசேகருக்கு சொந்தமான புலியகுளம் நிறுவனம் மற்றும் அவருக்கு தொடர்புடைய கே.சி.பி. நிறுவனங்களிலும் சோதனை நடந்தது. மேலும் கொடிசியா அருகே உள்ள சந்திரபிரகாஷின் வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு கே.சி.பி. நிறுவனத்தில் நடந்த சோதனையின் போது சந்திர பிரகாஷ் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர் 3 மணி நேரத்துக்கு மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் நிறுவனத்திற்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story