கோவை ஆயுதப்படை போலீஸ்காரர் சாவு


கோவை ஆயுதப்படை போலீஸ்காரர் சாவு
x

துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற கோவை யுதப்படை போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்தது விசாரணையில் தெரியவந்தது

கோயம்புத்தூர்

துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற கோவை யுதப்படை போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்தது விசாரணையில் தெரியவந்தது.

ஆயுதப்படை போலீஸ்காரர்

கோவை மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் காளிமுத்து (வயது29). இவர் கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாப் பட்டி அருகே உள்ள மேலத்துலுக்கன்குளம் ஆகும். இவர் சாலை தில்லை நாயகி (25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

காளிமுத்து, கோவை காந்திபுரத்தில் அரசு பொருட்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த காவல்துறை அரங்கில் பணியில் இருந்தார். பொருட்காட்சியில் 32-க்கும் மேற்பட்ட அரசு துறை அரங்குகள் உள்ளன. இதில் காளிமுத்து பணியில் இருந்த அரங்கில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பொதுமக்களின் பார்வைக்கு வைத்து இருந்தனர்.

துப்பாக்கியால் சுட்டார்

காவல்துறை அரங்கில் நேற்று முன்தினம் மாலை 3.40 மணியள வில், தனியாக இருந்த போலீஸ்காரர் காளிமுத்து தான் வைத்து இருந்த எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதில் துப்பாக்கி குண்டு அவரது வலது பக்க வயிற்றை துளைத்து முதுகுபகுதி வழியாக வெளியேறியது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் பதறிய டித்துக் கொண்டு ஓடிவந்தனர். அவர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த காளிமுத்துவை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

அஞ்சலி

துப்பாக்கி குண்டு காளிமுத்துவின் சிறுநீரகத்தை துளைத்துக் கொண்டு வெளியேறியதால் அதிக அளவு ரத்தம் வெளியேறி இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி காளிமுத்து இறந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோத னை செய்யப்பட்டு அவரது உடல், மனைவி சாலை தில்லைநாய கியிடம் ஒப்படைக்கப்பட்டது. காளிமுத்துவின் உடலுக்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்தார்

போலீசார் நடத்திய விசாரணையில் காளிமுத்து ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் ஆடியுள்ளார். ஆரம்பத்தில் சிறிதளவு பணத்தை இழந்த அவர், ரம்மி விளையாடி மீட்டு விடலாம் என்று தொடர்ந்து விளையாடி உள்ளார். இதற்காக தனது நண்பர்களி டம் ரூ.20 லட்சம் கடன் வாங்கி பணத்தை இழந்துள்ளார்.

அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் காளிமுத்து மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் போலீஸ் காரர் காளிமுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story