கோவை- பீகார் சிறப்பு ரெயில் இயக்கப்படும் காலம் நீட்டிப்பு


கோவை- பீகார் சிறப்பு ரெயில் இயக்கப்படும் காலம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2023 2:22 AM IST (Updated: 28 Jun 2023 3:11 PM IST)
t-max-icont-min-icon

கோவை- பீகார் சிறப்பு ரெயில் இயக்கப்படும் காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

சேலம்

சூரமங்கலம்:

ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க ரெயில்வே நிர்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலம் பரௌனியில் இருந்து சேலம், ஈரோடு வழியாக கோவை வரை இயக்கப்படும் பரௌனி - கோவை வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 03357) செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் கோவை- பரௌனி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 03358) அக்டோபர் மாதம் 4-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பரௌனி - கோவை வாராந்திர சிறப்பு ரெயில் (03357) சனிக்கிழமைகளில் பரௌனியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 12.35 மணிக்கு புறப்பட்டு ஈரோடு வழியாக அதிகாலை 4 மணிக்கு கோவை சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் கோவை - பரௌனி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 03358) புதன்கிழமைகளில் கோவையில் இருந்து அதிகாலை 12.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு வழியாக புதன்கிழமை அதிகாலை 3.28 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு பரௌனி சென்றடையும்.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story