ஜூனியர் மாடலிங் போட்டிக்கு கோவை சிறுவர்கள் தேர்வு

சர்வதேச அளவில் நடைபெறும் ஜூனியர் மாடலிங் போட்டிக்கு கோவை சிறுவர்கள் தேர்வு
சிறுவர்களுக்கான தேசிய அளவிலான 'ஜூனியர் மாடலிங் இன்டர்னேஷனல் 2023' போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில், தமிழகம் சார்பாக கோவை மாவட்டத்தில் இருந்து சிறுவன் ஒண்டிபுதூரை சேர்ந்த முகமது நிசார் (வயது 7), சரவணம்பட்டியை சேர்ந்த லிவின் (5) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பங்கேற்றவர்களுக்கு டேலன்ட் ரவுண்ட், இன்டர்வியூ, நேஷனல் காஸ்டியூம் ரவுண்ட் மற்றும் சூட் ரவுண்ட் ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் பிரின்ஸ் பிரிவில் சிறுவன் முகமது நிசார் முதலிடம் பிடித்தார்.
இதேபோல் சிறுவன் லிவின் டாட் பிரிவில் கலந்து கொண்டு 2-ம் இடம் பிடித்தார். இதன்மூலம் தாய்லாந்து நாட்டில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான 'ஜூனியர் மாடல் இன்டர்னேஷனல் 2023' போட்டிக்கு இந்தியா சார்பில் கோவையை சேர்ந்த சிறுவர்கள் முகமது நிசார், லிவின் ஆகியோர் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.






