கோவை 'கார் வெடிப்பு சம்பவத்துக்கும் எங்கள் மகன்களுக்கும் தொடர்பு கிடையாது'; கைதான 6 பேரின் பெற்றோர் பேட்டி


கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கும் எங்கள் மகன்களுக்கும் தொடர்பு கிடையாது; கைதான 6 பேரின் பெற்றோர் பேட்டி
x

6 பேரின் பெற்றோர் கோவை மத்திய சிறை முன்பு நின்றிருந்த காட்சி.

கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரை பார்ப்பதற்காக அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை கோவை மத்திய சிறை முன்பு பழங்கள் மற்றும் தின்பண்டங்களுடன் வந்திருந்தனர்.

கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரை பார்ப்பதற்காக அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை கோவை மத்திய சிறை முன்பு பழங்கள் மற்றும் தின்பண்டங்களுடன் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் 6 பேரும் சென்னை அழைத்துச்செல்லப்பட்டதால், பார்க்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அவர்களின் பெற்றோர் கூறியதாவது:-

சம்பவம் நடப்பதற்கு முந்தையநாள் எங்கள் வீட்டுக்கு வந்த ஜமேஷா முபின், நான் வீடு மாறபோகிறேன். நான் இதய நோயாளி என்பதால் தனியாக 3-வது மாடியில் இருந்து பொருட்களை எடுத்து கீழே கொண்டு வர முடியாது. எனவே எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இதனால் நாங்கள் எங்கள் மகன்களை அவருடன் அனுப்பி வைத்தோம்.

அதற்கு அடுத்த நாள் கார் வெடித்த பின்னர்தான் ஜமேஷா முபின் குறித்து தெரிந்து கொண்டோம். இந்த சம்பவத்துக்கும் எங்கள் மகன்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக போலீசார், 6 பேரையும் கைது செய்துவிட்டனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிப்பதால், எங்கள் மகன்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பது நிரூபிக்கப்படும். விரைவில் அவர்கள் வெளியே வருவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story