நாட்டிலேயே அதிவேகமாக இயக்கப்படும் ரெயில்களில் கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் 3-வது இடம்


நாட்டிலேயே அதிவேகமாக இயக்கப்படும் ரெயில்களில் கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் 3-வது இடம்
x
தினத்தந்தி 6 July 2023 1:00 AM IST (Updated: 6 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

நாட்டிலேயே அதிவேகமாக இயக்கப்படும் ரெயில்களில் கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் 3-வது இடம்

கோயம்புத்தூர்

கோவை

நாட்டிலேயே அதிவேகமாக இயக்கப்படும் ரெயில்களில் கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

வந்தேபாரத் ரெயில்

கோவை-சென்னை இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை (20644) கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படுகிறது. கோவையில் காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு பகல் 11.50 மணிக்கும், சென்னையில் இருந்து பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 8.15 மணிக்கும் வந்து சேருகிறது.

ரெயில் இயக்கப்பட்டது முதல் தொடர்ந்து முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. பயணிகளின் காத்திருப்போர்பட்டியல் அதிகரித்து வருகிறது. சென்னை -கோவை இடையே மொத்தம் உள்ள 500 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 50 நிமிடத்தில் சென்றடைவதால் பலரும் இந்த ரெயிலை விரும்பி வருகிறார்கள். இதில் சாதாரண கட்டணமாக ரூ.1,365 (உணவு உள்பட), எக்ஸ்கியூட்டிவ் கட்டணம் ரூ.2,485-ம் (சாப்பாடு உள்பட) வசூலிக்கப்படுகிறது.

நாட்டிலேயே 3-வது அதிவேக ரெயில்

கோவை-சென்னை வந்தே பாரத் ரெயில் கோவை முதல் ஜோலார்பேட்டை வரை மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்திலும், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வரை மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்படுகிறது. கோவை-சென்னை இடையே சராசரியாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இதுநாட்டிலேயே 3-வது இடத்தை பிடித்துள்ளது.

இதற்கான பட்டியலை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி டெல்லி- வாரணாசி வந்தே பாரத் ரெயில் 96.37 கிலோ மீட்டர் வேகத்தில் முதல் இடத்தில் உள்ளது. ஹஜரத் நிஜாமுதீன்-ராணி கம்லாபதி வந்தே பாரத் ரெயில் 95.89 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று 2-வது இடத்திலும், சென்னை-கோவை வந்தேபாரத் ரெயில் 90.36 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 3-வது இடத்திலும் உள்ளது. சென்னை-மைசூரு வந்தேபாரத் ரெயில் 79.36 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 10 -வது இடத்திலும் உள்ளது.

இந்த தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

-------------------

(பாக்ஸ்) வந்தேபாரத் ரெயில்களின் வேக விவரம்

வந்தே பாரத் ரெயில்கள்வேக விவரம் (கி.மீட்டரில்)

1. டெல்லி-வாரணாசி வந்தேபாரத் ரெயில்-96.37

2. ஹஜரத் நிஜாமுதீன்-ராணி கம்லாபதி ரெயில் -95.89

3. கோவை-சென்னை ரெயில் - 90.36

4. டெல்லி- ஆம்ப் ஆண்டவ்ரா ரெயில் - 84.85

5. செகந்திராபாத்-விசாகபுரம் ரெயில் - 84.21

6. காந்திநகர்-மும்பை ரெயில்- 83.87

7.அஜ்மீர்-டெல்லி ரெயில்- 83.10

8. டெல்லி- ஸ்ரீ மாதா வைஷ்ணு தேவி காத்ரா ரெயில்- 81.87

9. செகந்திராபாத்- திருப்பதி ரெயில்- 79.63

10. சென்னை-மைசூரு ரெயில்- 79.36

11. நாக்பூர்-பிலாஸ்பூர் ரெயில்- 77.92

12. அவுரா- ஜல்பியாகுரி ரெயில்- 76.84

13. மும்பை- சோலாப்பூர் ரெயில்- 71.65

14. மும்பை-சிருடி ரெயில்- 65.96



Next Story