கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்


கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் கல்பனா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கோவை மாநகராட்சி 5 மண்டல பகுதிகளை சேர்ந்த 36 பேர் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

கோவை இடையர்பாளையம் குடியிருப்போர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், பொதுமக்களுக்கு இடையூறாக விறகு கட்டைகளை அடுக்கி வைத்து, கடை நடத்துகிறார்கள். சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. கேட்டால் மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். அவினாசி ரோடு தொட்டிப்பாளையம் பிரிவை சேர்ந்த குடியிருப்போர் சங்கத்தினர் அளித்த மனுவில், தொட்டிப்பாளையம் பிரிவில் மழைநீர் வடிகால் செல்லும் பகுதியில் கற்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது. சில பாதைகள் மேடாக மாற்றப்பட்டுள்ளது எனவே மழைநீர் வடிந்தோட வழி செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

உக்கடம் பகுதியை சேர்ந்த ஜோதி அளித்துள்ள மனுவில், உக்கடம் பைாஸ் சாலை பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டை விரைவில் புல்லுக்காடு பகுதிக்கு மாற்றி கொடுத்து 298 குடும்பங்களுக்கு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் நிரந்தர குடியிருப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை 64-வது வார்டு பகுதியை சேர்ந்த ராஜ்குமார், மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் அளித்துள்ள மனுவில் பெரியார் நகர் பகுதியில் சுகாதார சீர்கேடுகளை சரி செய்து மாநகராட்சி மூலம் மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story