ஆண்கள் பிரிவில் கோவை மாவட்ட கூடைப்பந்து அணி வெற்றி
அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கோவை மாவட்ட கூடைப்பந்து அணி வெற்றி பெற்றது
கோவை
அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கோவை மாவட்ட கூடைப்பந்து அணி வெற்றி பெற்றது.
கூடைப்பந்து போட்டி
கோவை நேரு விளையாட்டு அரங்கம் எதிரே மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக் கான 55-வது ஆண்டு ஆண்களுக்கான கூடைப்பந்து, சி.ஆர்.ஐ. கோப்பைக்கான 19-வது ஆண்டு பெண்களுக்கான அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடங்கியது.
நேற்று போட்டியை வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள் பிரிவில் 9 அணிகள், பெண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
பெண்கள் பிரிவு
நேற்று நடந்த போட்டியில் பெண்கள் பிரிவில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியும், கேரள மாநில மின்சார வாரிய அணியும் விளையாடின.
இதில் கேரள மாநில மின்சார வாரிய அணி 83-38 என்ற புள்ளிக்கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தியது.
இதேபோல் கொல்கத்தா கிழக்கு ெரயில்வே அணியை எதிர்த்து கேரளா போலீஸ் அணி அணி விளையாடியது. இதில் கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி 71-65 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
சென்னை ரைசிங் ஸ்டார் அணியை எதிர்த்து தமிழ்நாடு கூடைப்பந்து கழக டி.ஆர்.டபிள்யூ. அணி ஆடியது. இதில் சென்னை ரைசிங் ஸ்டார் அணி 54-49 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட அணி
முன்னதாக நடந்த ஆண்கள் பிரிவில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணியை எதிர்த்து சென்னை தமிழ்நாடு கூடைப்பந்து கழக டி.ஆர்.டபிள்யூ. அணி விளையாடியது.
இதில், கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி 77-66 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடியது.
---
Image1 File Name : 10872991.jpg
----
Reporter : S.MUTHUKUMAR_Staff Reporter Location : Coimbatore - Coimbatore