கோவை அரசு நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்


கோவை அரசு நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்
x

மாணவிகளிடம் முறைகேடாக கட்டணம் வசூலித்த புகாரில் ஓய்வுபெறும் நிலையில் இருந்த கோவை அரசு நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

மாணவிகளிடம் முறைகேடாக கட்டணம் வசூலித்த புகாரில் ஓய்வுபெறும் நிலையில் இருந்த கோவை அரசு நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நர்சிங் பயிற்சி பள்ளி

கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சிங் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 மாணவிகள் படித்து வருகிறார்கள். பயிற்சி பள்ளி முதல்வராக வசந்தி என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் பயிற்சி பள்ளி முதல்வர் வசந்தி, செய்முறை தேர்வுக்கு மாணவிகளிடம் முறைகேடாக கட்டணம் வசூலித்ததாக மாணவிகள் மருத்துவ கல்லூரி இயக்குனரகத்துக்கு புகார் அனுப்பினர்.

அதன் அடிப்படையில் மருத்துவ கல்லூரி இயக்குனரகம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், மாணவிகள் அளித்த புகார் உண்மை என்பது தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

இதையடுத்து கடந்த 29-ந் தேதி முதல் அவரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.

அரசு நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர் வசந்தி நேற்று முன்தினம் ஓய்வு பெற இருந்த நிலையில் இருந்தார். இந்தநிலையில் தான் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவ கல்வி இயக்குனரகம் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தியது.

அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.


Next Story