கோவை- கரூர் சாலையை ரூ.400 கோடியில் விரிவாக்க திட்டம்


கோவை- கரூர் சாலையை ரூ.400 கோடியில் விரிவாக்க திட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2023 2:00 AM IST (Updated: 16 Jun 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலை ரூ.400 கோடியில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலை ரூ.400 கோடியில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.400 கோடி

கோவை-கரூர் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்த மத்திய அரசு ரூ.400 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

இதில் ரூ.274 கோடியில் வெள்ளக்கோவில் முதல் பல்லடம் வரையிலான 47 கிலோ மீட்டர் தூர சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும்.

மற்ற பகுதிகள் ரூ.130 கோடியில் அகலப்படுத்தப்படும். சாலை விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து 2 ஆண்டுகளுக்குள் சாலை பணிகள் முடிவடையும்.

இந்த சாலையை அமைப்பதன் மூலம் போக்குவரத்துநெரிசலுக்கு தீர்வு காணப்படும்.

சத்திசாலை

இதேபோல் சத்திசாலைைய விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பெருகி வரும் வாகன போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், விபத்துகளை தடுக்கவும் சாலைகள் விரிவுபடுத்தப்படுகிறது

.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவை நகரில் சிங்காநல்லூர் பஸ் நிலையம், சரவணம்பட்டி, சாய்பாபாகாலனி என்.எஸ்.ஆர்.ரோடு ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை காரணம் காண்பித்து இந்த பால பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

பொதுமக்களும் இந்த பாலங்களை கட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.


Next Story