கோவை-மேட்டுப்பாளையம் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்


கோவை-மேட்டுப்பாளையம் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 May 2023 2:15 AM IST (Updated: 12 May 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவை-மேட்டுப்பாளையம் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்

கோயம்புத்தூர்

கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் காலை 9.35 மணி, 11.50 மணி, மாலை 3.45 மணி, 5.55 மணி, இரவு 8.25 மணி ஆகிய நேரத்திலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 8.20 மணி, காலை 10.55 மணி, மதியம் 1.05 மணி, மாலை 4.45 மணி, இரவு 7.15 ஆகிய நேரத்திலும் மெமு ரெயில் இயக்கப் பட்டு வருகிறது. இந்த ரெயிலில் தினமும் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. எனவே கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.

இது குறித்து கோவை மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜமீல் அகமது, மேட்டுப்பாளையம் ராஜன் மற்றும் பயணிகள் கூறியதாவது:-

கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் ரெயிலில் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளன. தினமும் 5 முறை சென்று வருகிறது. ஒவ்வொரு முறையிலும் சீசன் டிக்கெட் உள்ள 3 ஆயிரத்து 450 பேர் பயணிக்கிறார்கள். இது தவிர 1,435 பயணிகள் பயணித்து வருகிறார்கள்.

இதனால் இந்த ரெயிலில் கூட்டம் அதிகமாகதான் இருக்கிறது. ஆனால் கோவையில் இருந்து சொர்னூருக்கு இயக்கப்படும் ரெயிலில் 12 பெட்டிகள் இருந்தாலும் கூட்டம் குறைவாகதான் இருக்கிறது.

எனவே கோவை -மேட்டுப்பாளையம் ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story