கோவையில் தொடர் பகீர் சம்பவம் - இரண்டு பேர் அதிரடி கைது


கோவையில் தொடர் பகீர் சம்பவம் - இரண்டு பேர் அதிரடி கைது
x

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளோம் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பாஜக நிர்வாகி மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இந்த சம்வத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோரை கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட இருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பொறுப்பில் உள்ளனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். பல்வேறு மத அமைப்பினரும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

சிசிடிவி மற்றும் நுண்ணறிவு பிரிவு விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு அல்லாத பொருட்கள் மீது தீவைத்து தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வழக்குகளில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்று கூறினார்.


Related Tags :
Next Story