கோவை மாணவி சாதனை
கோவை மாணவி சாதனை
கோவை
ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாணவி 498 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
கோவை மாணவி சாதனை
கோவை பாப்பாநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சத்தியமூர்த்தி. இவரது மகள் யாகவி (வயது17). இவர் கோவை தனியார் பள்ளியில் ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் மொத்தம் 500 மதிப்பெண்களில் 498 மதிப்பெண்கள் பெற்றார். ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு ஆகிய பாடங்களில் 100-க்கு 100-ம், இந்தியில் 98 மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்தார். மாணவி யாகவியை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவிகள் பாராட்டினர்.
குறிக்கோள்
இதுகுறித்து மாணவி யாகவி கூறும்போது, கணிதம், அறிவியல் பாடங்களில் மிகவும் சிரத்தையுடன் படித்தேன். டியூசனுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே பாடங்களை படித்தேன். பள்ளியில் அன்றாடம் நடத்தும் பாடங்களை அன்றே படித்துவிடுவேன். எனக்கு பெற்றோர், ஆசிரியர்கள் மிகவும் உதவிகரமாக இருந்தனர். வருங்காலத்தில் நான் மருத்துவராகி, குறிப்பாக இருதய அறுவை சிகிச்சை மருத்துவராகி சேவை செய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ளேன் என்றார்.