கோவை வீராங்கனை தன்யதா வெள்ளிப்பதக்கம் வென்றார்
ஆசிய சாம்பியன்ஷிப் டிராக் சைக்கிள் போட்டியில் கோவை வீராங்கனை தன்யதா வெள்ளிப்பதக்கம் வென்றார்
கோயம்புத்தூர்
சரவணம்பட்டி
ஆசியா சாம்பியன்ஷிப் டிராக் சைக்கிள் -2023 போட்டி மலேசி யாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் தமிழகத்தில் இருந்து கோவையை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி தன்யதா (வயது 17) கலந்து கொண்டார்.
இந்திய அணியின் 37 ரைடர்களில் ஜூனியர் தனிநபர் பிரிவில் தன்யதா பங்கேற்று 2.28.861 நிமிடத் தில் 2 கி.மீட்டர் பந்தயத்தில் வெற்றி பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்திய டிராக் சைக்கிள் ஓட்டுதல் போட்டியில் பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.
மாணவி தன்யதா, கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுரேஷ் குமார், இன்ஸ்பெக்டர் பிரியம்வதா தம்பதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. வீராங்கனை தன்யதாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story