திருமண ஆசை காட்டி கோவை பெண் பாலியல் பலாத்காரம்


திருமண ஆசை காட்டி கோவை பெண் பாலியல் பலாத்காரம்
x

திருமண ஆசை காட்டி கோவை பெண் பாலியல் பலாத்காரம்

கோயம்புத்தூர்

கோவை

முகநூல் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில், திருமண ஆசை காட்டிகோவை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சென்னை வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை ஊழியர்

கோவை நியூசித்தாபுதூர் பகுதியை சேர்ந்த 30 வயது பெண் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நான் ஊழியராக பணி புரிந்து வருகிறேன். இந்த நிலையில் முகநூல் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஜோலார்பேட்டையை சேர்ந்த கோபி (32) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம். நாளடைவில் எங்களுக்கு காதல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்தார்.

பலாத்காரம்

இந்த நிலையில் கடந்த ஆண்டு அவர், கோவையில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு வந்தார். தொடர்ந்து அவர் எனது வீட்டிற்கும் வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இதையடுத்து அவர் என்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து நாங்கள் பலமுறை தனியாக அடிக்கடி சந்தித்து வந்தோம். இந்த நிலையில் அவரிடம் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினேன்.

ஆனால் அதன்பின்னர் அவர் என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். மேலும் என்னை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். எனவே திருமண ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த கோபி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில்கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story