பழங்கால நாணய கண்காட்சி


பழங்கால நாணய கண்காட்சி
x

நார்த்தம்பட்டியில் பழங்கால நாணய கண்காட்சி நடைபெற்றது.

தர்மபுரி

150 நாடுகளின் பழங்கால நாணயங்கள் மற்றும் அக்கால போர் கருவிகள் கண்காட்சி தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் நார்த்தம்பட்டியில் உள்ள விஷன் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை பள்ளி நிர்வாகிகள் வெற்றிவேலன், முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆபரணங்கள், பெண்கள் பயன்படுத்திய சிலம்புகள், ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வானொலி பெட்டி, தபால் அட்டைகள், தொலைபேசி, இசைக்கருவிகள், பீரங்கி குண்டுகள், விளக்குகள், பண்டையகால கடிகாரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விவரங்கள் குறித்து பள்ளி முதல்வர் சின்னசாமி விளக்கம் அளித்தார். இந்த கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.


Related Tags :
Next Story