'டாடா' திரையிடல் நிகழ்ச்சியின் போது இடிந்து விழுந்த மேற்கூரை - எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் பரபரப்பு


டாடா திரையிடல் நிகழ்ச்சியின் போது இடிந்து விழுந்த மேற்கூரை - எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரியில் பரபரப்பு
x

‘டாடா’ படத்தின் திரையிடல் நிகழ்ச்சியின்போது திடீரென திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள மாணவர்களுக்காக நடிகர் கவின் நடிப்பில் அண்மையில் வெளியான 'டாடா' படத்தின் திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது திடீரென திரையரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக திரையரங்கின் மேடை மீது இடிபாடுகள் விழுந்ததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில் பராமரிப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


1 More update

Next Story