திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.5.88 கோடி உண்டியல் காணிக்கை வசூல்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.5.88 கோடி உண்டியல் காணிக்கை வசூல்
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 70,496 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த ஆண்டு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினந்தோறும் சராசரியாக 65 ஆயிரம் முதல் 80 ஆயிரமாக உள்ளது. ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் 25 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மற்றும் இலவச டைம் ஸ்லாட், சேவா டிக்கெட்டுகள் பெற்றும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 70,496 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதே போல் நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 88 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Next Story