சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ரூ.12¾ லட்சம் காணிக்கை வசூல்
சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ரூ.12¾ லட்சம் காணிக்கை வசூல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவாகரன் தலைமையில் ஆய்வாளர் சுகன்யா, செயல் அலுவலர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.12 லட்சத்து 73 ஆயிரத்து 830 பணத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அப்போது எழுத்தர் லோகநாதன், பாளையக்காரர் சிவா, பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் கோவில் பூசாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story