மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக ரூ.44½ லட்சம் வசூல்


மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக ரூ.44½ லட்சம் வசூல்
x

மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தி ரூ.44½ லட்சம் காணிக்கையாக வசூலிக்கப்பட்டது.

காஞ்சிபுரம்

பிரசித்தி பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்தி செல்வார்கள். நேற்று கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. அதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.44 லட்சத்து 62 ஆயிரத்து 18 ரொக்கமாகவும், 435 கிராம் தங்கம் மற்றும் 1.860 கிராம் வெள்ளியாகவும் செலுத்தி இருந்தனர். கோவில் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன், கோவில் துணை கமிஷனர் கவெனிதா மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.


Next Story