உண்டியல் காணிக்கை மூலம் ரூ.81½ லட்சம் வசூல்


உண்டியல் காணிக்கை மூலம் ரூ.81½ லட்சம் வசூல்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.81½ லட்சம் வசூல் ஆனது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு பழனி, திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்தும் மற்றும் பிறமாவட்டம், பிறமாநிலங்களிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருகின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 22 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அதில் தட்டு காணிக்கை உண்டியல் மூலம் ரூ.24 லட்சத்து 85 ஆயிரத்து 536-ம், நிரந்தர உண்டியல் ரூ.56 லட்சத்து 55 ஆயிரத்து 508-ம் மொத்தம் ரூ.81 லட்சத்து 41 ஆயிரத்து 44-யை பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 400 கிராம், வெள்ளி 500 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

இப்பணியில் மாசாணி அம்மன் கோவில் உதவி ஆைணயர் ரா.விஜயலட்சுமி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி ஆைணயர் விமலா, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, ஆய்வர் ப.சித்ரா மற்றும் பாதுகாப்பு அதிகாரி முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story