ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.84 லட்சம் வசூல்


ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.84 லட்சம் வசூல்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.84 லட்சம் வசூல்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

கோவை மாவட்டம் ஆனைமலையில் பிரசித்திபெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணிகளில் பக்தர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில், தட்டு காணிக்கை உண்டியல் மூலம் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்து 624-ம், நிரந்தர உண்டியல் மூலம் ரூ.72 லட்சத்து 31 ஆயிரத்து 567-ம் என மொத்தம் உண்டியல் காணிக்கையாக ரூ.84 லட்சத்து 14 ஆயிரத்து 191 வசூலானது. இதுதவிர 362 கிராம் தங்கமும், 729 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், மாசாணியம்மன் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளா தேவி, தங்கமணி, மருதமுத்து, மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ரா.விஜயலட்சுமி, தேக்கம்பட்டி உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, ஆய்வாளர் ப.சித்ரா, பாதுகாப்பு அதிகாரி முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story