ரூ.20½ லட்சம் காணிக்கை வசூல்


ரூ.20½ லட்சம் காணிக்கை வசூல்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் ரூ.20½ லட்சம் காணிக்கை வசூல்

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

மணலூர்பேட்டை அருகே திருவரங்கத்தில் பழமை வாய்ந்த ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்ட 11 உண்டியல்கள் கள்ளக்குறிச்சி இந்துசமய அறநிலையத்துறை உதவி இயக்குனர் சிவாகரன், அறங்காவலர் குழு தலைவர் பாலாஜிபூபதி ஆகியோர் மேற்பார்வையில் நேற்று காலை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செயல் அலுவலர் அருள், இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் பிரகாஷ், விமல் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காலையில் இருந்து தொடங்கிய பணி மாலை 6½ மணியளவில் முடிவடைந்தது. இதில் 11 உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த ரூ.20 லட்சத்து 63 ஆயிரத்து 472 இருந்தது. தங்கம், வெள்ளி நகைகள் ஏதுவுமில்லை. பின்னர் இந்த பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. முன்னதாக மணலுார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Next Story