மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை


மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை
x
தினத்தந்தி 2 Sept 2023 3:45 AM IST (Updated: 2 Sept 2023 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு ஆதாளியம்மன் கோவிலில் மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.

கோயம்புத்தூர்



பொள்ளாச்சி

பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மூலம் பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி அணைகள் மற்றும் தொகுப்பு அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டி விடும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை ஜூலை மாதம் தாமதமாக தொடங்கியது. இருப்பினும் போதுமான அளவு மழை பெய்யவில்லை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் கடும் வறட்சி ஏற்படும் நிலை உள்ளது. இந்தநிலையில் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை பகுதியில் உள்ள ஆதாளியம்மன் கோவிலில் நேற்று மழை வேண்டி சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்யப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதையடுத்து கலந்துகொண்டவர்களுக்கு பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில் தலைமை பொறியாளர் சிவலிங்கம், செயற்பொறியாளர்கள் முருகேசன், காஞ்சித்துரை, உதவி செயற்பொறியாளர்கள் சிங்காரவேலன், நாட்ராயன், ஆனந்தபாலதண்டாயுதபாணி, திருமூர்த்தி திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர். பின்னர் சாரல் மழை பெய்தது.




Next Story