சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு


சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
x

சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலத்தில் உள்ள தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீரென வந்தார். அப்போது அவரை மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், தலைமை மருத்துவர் சாந்தி ஆகியோர் வரவேற்றனர். அப்போது மருத்துவமனையில் இருந்த வருகை பதிவேட்டை ஆய்வு செய்த கலெக்டர் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் வருகை குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து தினசரி நோயாளிகள் வருகை பதிவேட்டை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மகப்பேறு பிரிவுக்கு சென்று தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ உதவிகள் குறித்து விசாரித்தார்.

தொடர்ந்து சேந்தமங்கலம் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற அவர் பத்திரப்பதிவு செய்யும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது சேந்தமங்கலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்காக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக சார்-பதிவாளர் அலுவலகம் அருகே வழி ஏற்பாடு செய்து கொடுக்க அங்கு இருந்த சார்- பதிவாளர் மோகன்ராஜிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட அவர் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அந்த ஆய்வின்போது சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார் பாரதிராஜா, அரசு பெண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story