கொரோனாவால் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்


கொரோனாவால் பெற்றோரை இழந்த  23 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை  கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
x

கொரோனாவால் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல்லில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 229 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கல்வி உதவித்தொகை

இதில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு தனியார் அறக்கட்டளை மூலம் தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கல்வி உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார். இதில் 20 பேர் தனியார் பள்ளியிலும், 3 பேர் தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டும் படித்து வருகின்றனர்.

பெற்றோரை இழந்து வறுமையில் வாழ்ந்து வரும் இவர்களின் கல்வி தடைபடாமல் இருப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ரூ.3 லட்சம் வழங்கி உள்ளார். மேலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு தேவைகளுக்கு ஏற்றவாறு உதவிகள் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகா ராணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், பாதுகாப்பு அலுவலர் சவுடேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story