மோகனூர் கால்நடை மருந்தகத்தில் வெறிநாய் தடுப்பூசி முகாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்


மோகனூர் கால்நடை மருந்தகத்தில்  வெறிநாய் தடுப்பூசி முகாம்   கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:46 PM GMT)

மோகனூர் கால்நடை மருந்தகத்தில் நடந்த வெறிநாய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் கால்நடை மருந்தகத்தில் நடந்த வெறிநாய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.

வெறிநாய் தடுப்பூசி

ரேபிஸ் வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுப்பிடித்த விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் நினைவு நாள் உலக ரேபிஸ் தினம் (வெறிநோய் தினம்) கடந்த 2007-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நாமக்கல் மாவட்டம் மோகனூர் கால்நடை மருந்தகத்தில் உலக வெறிநோய் தினத்தையொட்டி நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இந்த முகாமை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார். இதையடுத்து உலக வெறிநோய் தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மோகனூர் சுப்ரமணியம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

105 கால்நடை மருந்தகங்கள்

மேலும் வெறிநாய் கடி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் செல்வராஜ், நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் பாஸ்கர், மோகனூர் ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி கருமண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரேணுகாதேவி சண்முகம், ராசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 105 கால்நடை மருந்தகங்கள், 5 கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாமில் மொத்தம் 2,700-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story