முப்படை வீரர்களின் நலன்காக்க கொடிநாளில் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் கலெக்டர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள்


முப்படை வீரர்களின் நலன்காக்க  கொடிநாளில் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும்  கலெக்டர் ஸ்ரேயா சிங் வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய நாட்டு எல்லைகளில் இரவு, பகல் பாராமலும், தன் நலத்தை பாராமலும் கடும ்பனிப்பொழிவு மற்றும் கடும் வெப்பத்தை பொருட்படுத்தாமல் நாட்டை காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ந் தேதி படைவீரர் கொடிநாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி கொடிநாளன்று வசூலிக்கப்படும் தொகையை போரில் உயிர் தியாகம் செய்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கும், போரின்போது உடல் ஊனமுற்ற படைவீரர்களின் மறுவாழ்வு பணிகளுக்காகவும், முன்னாள் படைவீரர்களின் நலன்களை பேணி காக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே முப்படை வீரர்களின் நலன்காக்க, படைவீரர் கொடிநாளை முன்னிட்டு திரட்டப்படும் கொடிநாள் நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story