தர்மபுரியில்மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.45 கோடி வங்கி கடன் உதவிகலெக்டர் சாந்தி வழங்கினார்


தர்மபுரியில்மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.45 கோடி வங்கி கடன் உதவிகலெக்டர் சாந்தி வழங்கினார்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரியில் நடந்த அரசு விழாவில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.45 கோடி வங்கி கடன் உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

வங்கி கடன் உதவிகள்

தர்மபுரி மகளிர் திட்டம் சார்பில் மாவட்ட அளவிலான மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகள் வழங்கும் விழா தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 491 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.43.03 கோடி வங்கி கடன் உதவிகளையும், 77 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.16 கோடி சமுதாய முதலீட்டு நிதியினையும், 3 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு தலா ரூ.50 லட்சம் வீதம் 45 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.1.50 கோடி கடன் உதவிகள் என மொத்தம் 613 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.45 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வங்கி கடன் உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

பொருளாதார முன்னேற்றம்

இதையடுத்து அவர் கூறுகையில் வங்கிக்கடன் உதவி பெறும் மகளிர் சுயஉதவி குழுக்கள் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்று கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி நிலைமை திட்ட இயக்குனர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story