நாமக்கல் மாவட்டத்தில்மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து வருகிறதுசுகாதார பேரவை நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு


நாமக்கல் மாவட்டத்தில்மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து வருகிறதுசுகாதார பேரவை நிகழ்ச்சியில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து வருகிறது என்று சுகாதார பேரவை நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசினார்.

சுகாதார பேரவை

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் மாவட்ட சுகாதார பேரவை நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது:- தமிழக அரசு மக்களின் நலன் காக்கும் வகையில் சுகாதாரத்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

மருத்துவ குறியீடுகள்

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை, மருத்துவ பணிகள் துறை மற்றும் அரசு மருத்துவ கல்லூரி என அனைத்து மருத்துவத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் மருத்துவ குறியீடுகளில் நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

நாமக்கல் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இருப்பினும் மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதார உட்கட்டமைப்புகளை மேம்படுத்த போதிய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மக்கள் நல பணியாளர்கள் உள்ளனரா? என்பதை உறுதிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை) விஜயலட்சுமி, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இணை இயக்குனர் ரவிக்குமார், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள் மொழி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) பிரபாகரன், சமூக நலத்துறை திட்ட இயக்குனர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story