செக்கோடி, பூகான அள்ளியில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு


செக்கோடி, பூகான அள்ளியில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு
x
தினத்தந்தி 17 April 2023 12:30 AM IST (Updated: 17 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

செக்கோடி மற்றும் பூகானஅள்ளி கிராமங்களில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நீர்வழி பகுதிகள்

வேளாண்மை துறை நீர்வடி பகுதி திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் செக்கோடி மற்றும் பூகானஅள்ளி கிராமங்களின் நீர்வழி பகுதிகளில் அமரித் சரோவர், கசிவு நீர்குட்டைகள், பெரிய தடுப்பணை, தானிய உலர்களம் அமைத்தல் ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் செக்கோடி மற்றும் பூகானஅள்ளி கிராமங்களின் நீர்வழி பகுதி திட்ட வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமரித் சரோவர் திட்டத்தினை பார்வையிட்டு அதன் சுற்றுப்புறத்தில் மரக்கன்றுகள் நடவினையும் ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகளுக்கு மின்விசை தெளிப்பான் வினியோகம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள தானியக்களத்தினை ஆய்வு மேற்கொண்டு அதன் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டு வரும் பெரிய தடுப்பணைகள், கசிவு நீர்குட்டைகள் ஆகியவற்றை ஆய்வு செய்த கலெக்டர் ஒரு விவசாயிக்கு மின்விசை தெளிப்பான் வழங்கினார்.

இடுபொருட்கள் வினியோகம்

அப்போது கலெக்டர் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் இயற்கை வள மேம்பாட்டு பணிகளில் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக கசிவுநீர் குட்டைகள், பெரிய தடுப்பணைகள், ஏரி தூர்வாருதல், கிராம குட்டைகள் மற்றும் நீர் அமிழ்வுக்குட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பாலக்கோடு வட்டாரத்தில் 5,405 எக்டர் பரப்பளவில் 7 கிராமங்களில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டப்பணிகள் 5 ஆண்டு திட்டப்பணிகளாக 2021-2022 நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டப்பணிகளில் விவசாயிகள், சுய உதவி குழுக்கள் மற்றும் பயனாளி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வேளாண்மை உற்பத்தி திட்டப் பணிகளில் இடுப்பொருட்கள் வினியோகம் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதிகளும், நிலமற்றோர்க்கு இடுப்பொருட்களும் வழங்கப்படுகின்றன என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, வேளாண்மை துணை இயக்குநர் ஜெகதீசன், வேளாண்மை உதவி இயக்குநர் சகாயராணி, உதவி பொறியாளர் பத்மாவதி, நீர்வடிப்பகுதி பொறியாளர் வேலவன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story