ரூ.78¼ லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளில் கலெக்டர் ஆய்வு


ரூ.78¼ லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளில் கலெக்டர் ஆய்வு
x
திருப்பூர்


தாராபுரம் அருகே தளவாய்ப்பட்டினம் ஊராட்சியில் ரூ.78¼ லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தளவாய்ப்பட்டினம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.78.34 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டப்பணிகள் பொதுமக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நேற்று, தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், தளவாய்ப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட மிலிட்டரி காலனியில் பாரத பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.62.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 23 குடியிருப்புகளை பார்்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூ.78¼ லட்சம்....

இதனை தொடர்ந்து தளவாய்ப்பட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னக்கல்பாளையத்தில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.1.19 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி பராமரிப்பு பணிகளையும் மற்றும் சமையல் அறை கட்டிடம் கட்டும் பணியினையும் பார்வையிட்டார். பிறகு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிவசக்தி காலனியில் ரூ.6.60 லட்சம் மதிப்பீட்டில் கான்கரீட் சாலை ஊத்துப்பாளையம் பகுதியில் ரூ.8.45 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கதிரடிக்கும் தளம் என மொத்தம் ரூ.78.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, தாராபுரம் தாசில்தார் அலுவலகம், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், துணைத் தலைவர் சசிக்குமார், தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுப்பரியா, மனோகரன், தளவாய் பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் மோகனா சந்தானகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story