நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் கலெக்டர் திடீர் ஆய்வு


நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

தர்மபுரி மாவட்டம் அரூரில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் திடீர் ஆய்வு நடத்திய கலெக்டர் திவ்யதர்சினி உணவு பொருட்களின் எடை குறைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

தர்மபுரி

அரூர்:

திடீர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் அரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு பொதுவினியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. அரிசி, சமையல் எண்ணெய், சர்க்கரை, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் இங்கு இருப்பு வைக்கப்பட்டு அரூர் வட்டார பகுதியில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்தநிலையில் கலெக்டர் திவ்யதர்சினி அந்த கிடங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருட்களின் இருப்பு குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார். பொருட்களின் தரத்தையும் பரிசோதித்தார். அப்போது மாதத்தின் முதல் வாரத்திற்கான உணவுப்பொருட்களை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்காமல் இருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த கிடங்கில் சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களில் எடை குறைதல், இருப்பு வைப்பதில் குளறுபடி இருப்பது தெரியவந்தது.

எச்சரிக்கை

பொதுவினியோகத் திட்ட உணவுப் பொருட்களை எந்தவித தாமதமும் இன்றி உரிய நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களில் எடை குறைவு இருப்பதாக ஆய்வின் மூலம் தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின் போது அரூர் தாசில்தார் கனிமொழி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர். இதேபோல் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு நடத்தினார். அங்கு டாக்டர்களின் வருகைப் பதிவேட்டை பார்வையிட்டார். ஆஸ்பத்திரியில் மருந்து, மாத்திரைகள் இருப்பு விவரம் குறித்த பட்டியலை ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story