கலெக்டர் திடீர் ஆய்வு


கலெக்டர் திடீர் ஆய்வு
x

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிவதையொட்டி, வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு, பகிர்மான பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு தணிக்கை செய்தார்.

மேலும் அனைத்து பதிவேடுகளில் மேற்கொள்ளப்படும் பதிவுகளை நாளது தேதி வரை பதிவு செய்து பராமரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தாசில்தார்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது வாணியம்பாடி தாசில்தார் சம்பத், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பழனி மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story