14,774 ரேசன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்- கலெக்டர் லலிதா

14,774 ரேசன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கு தொடங்க வேண்டும்- கலெக்டர் லலிதா
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கி கணக்கு தொடங்காத 14,774 ரேசன் அட்டைதாரர்கள் உடனடியாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தி உள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கி கணக்கு தொடங்காத 14,774 ரேசன் அட்டைதாரர்கள் உடனடியாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என கலெக்டர் லலிதா அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விண்ணப்பம்

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள 14 ஆயிரத்து 774 ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் உடனடியாக வங்கி கணக்கு தொடங்க வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்கள், புதியவங்கி கணக்கு தொடங்குவதற்காக அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை அவர்களுக்குரிய ரேசன் கடையில் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதார் எண்

ஏற்கனவே வங்கி கணக்கு இருந்து, ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால் அந்த ரேசன் அட்டைதாரர்கள் அந்த வங்கிக்கு சென்று அவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லாவிட்டால், அருகில் உள்ள கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ புதிய கணக்கை தொடங்கி, அதில் ஆதார் எண்ணை இணைத்து, அந்த விவரங்களை தங்களின் ரேசன் கடையில் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story